search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்துறை அமைச்சகம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குண்டு வெடிப்பில் 9 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை.
    • கர்நாடகா அரசு தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தது.

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை குண்டு வெடித்தது. இதில் 9 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய கர்நாடகா அரசு தனிப்படைகள் அமைத்துள்ளது. தனிப்படைகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. குண்டு வைத்ததாக சந்தேகப்படும் நபரின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, அதன் அடிப்படையில் குற்றவாளியை தீவிரமாக தேடிவருகிறது.

    குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய யாரும் தப்ப முடியாது என சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார். மேலும், இதை அரசியலாக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

    கர்நாடக மாநில போலீசாரின் தனிப்படை விசாரணை நடத்தி வரும் நிலையில், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கை மத்திய உள்துறை அமைச்சகம் என்.ஐ.ஏ.-யிடம் ஒப்படைத்துள்ளது. என்.ஐ.ஏ. குண்டு வெடிப்பு தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து இதுவரை நடைபெற்றுள்ள விசாரணைகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் கர்நாடகா மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை என்.ஐ.ஏ.-யிடம் ஒப்படைக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த இரண்டு வாரங்களில் சந்தேகத்திற்குரிய கிளர்ச்சிக்குழுவால் பலர் படுகொலை.
    • கூட்டத்தில் பங்கேற்க எம்.எல்.ஏ.-க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இதனால் மணிப்பூரில் ஆங்காங்கே மோதல் வெடித்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் பள்ளத்தாக்கைச் சேர்ந்த கிராம பாதுகாப்புக்கு குழு இன்று மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள கங்லா கோட்டையில் மிகப்பெரிய கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதனால் நேற்று இரவு முதல் இதுவரை இல்லாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பள்ளத்தாக்கின் கிராம பாதுகாப்பு குழுவான அரம்பை டெங்கோல் (AT) என்ற குழு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்திற்கு எம்.எல்.ஏ.-க்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த கூட்டத்தில் மணிப்பூர் வன்முறையில் தலைவர்கள் நிலை என்ன? என்பது தெளிவாக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    கடந்த இரண்டு வாரங்களில் நான்கு மரம் வெட்டுபவர்கள், கிராம பாதுகாப்பு தன்னார்வலர்கள், இரண்டு போலீஸ் கமாண்டோஸ் ஆகியோர் சந்தேகத்திற்குரிய கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் இந்த கூட்டத்தை நடத்த முன்வந்துள்ளது.

    இதனால் மத்திய அமைச்சகம் மூன்று பேர் கொண்ட சிறப்பு குழுவை மணிப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த குழு நேற்று இரவு மணிப்பூர் வந்துள்ள நிலையில் அரம்பை டெங்கோல் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

    கங்லா கோட்டை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மத்திய மற்றும் மாநில பாதுகாப்புப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே நாகா பழங்குடியின தலைவர்கள் உள்பட 35 எம்.எல்.ஏ.க்கள் 25 குகி கிளர்ச்சி குழுக்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளளது. எங்களது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால், மக்களுடன் ஆலோசித்து, அதன்படி தலைவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் சொல்லும் நடவடிக்கை, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்து பா.ஜனதா அரசை கவிழ்ப்பது எனத் தகவல் தெரிவிக்கிறது. மணிப்பூர் சட்டசபை 60 எம்.எல்.ஏ.க்களை கொண்டதாகும்.

    குகி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பாதுகாப்புப்படை முழு அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தம் முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

    • நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி அதற்கு ஒப்புதல் பெற கவர்னர் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.
    • ஜனாதிபதி அளித்த பதிலில், நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு உள்ளது என கூறப்பட்டிருந்தது.

    சென்னை:

    நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது.

    இதுதொடர்பாக ஏற்கனவே சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் மீண்டும் சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி அதற்கு ஒப்புதல் பெற கவர்னர் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.

    இதையடுத்து மதுரை எம்.பி. வெங்கடேசன் கடந்த ஜனவரி மாதம் நீட் விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பி இருந்தார்.

    அந்த கடிதத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

    இதற்கு ஜனாதிபதி அளித்த பதிலில், நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு உள்ளது என கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில் எம்.பி.யின் கடிதத்தின் நிலையை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கஜேந்திரபாபு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு மனு செய்திருந்தார். அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில் ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பப்பட்ட கடிதம் உள்துறை அமைச்சகத்தில் பெறப்படவில்லை என்று அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜனாதிபதியின் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட தகவல் தொடர்புகள் எப்படி காணாமல் போனது என்று கேள்வி எழுப்பியுள்ள கஜேந்திரபாபு இதுதொடர்பாக புதிய விண்ணப்பத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உள்துறை அமைச்சகத்தில் நேற்று நள்ளிரவு 12.18 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை என்று தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் வடக்கு பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் நேற்று நள்ளிரவு 12.18 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    உள்துறை அமைச்சகத்தில் உள்ள தொலைபேசி பரிமாற்ற அறையில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்டதை அடுத்து தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வாகனங்களுடன் விரைந்தனர்.

    பின்னர் தண்ணீரை பீய்த்து அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், " தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிகாலை 1.05 மணியளவில் தீயணைப்புத் துறையினரால் தீ அணைக்கப்பட்டது. இதுவரை தீ விபத்துக்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை" என்றார்.

    நிகழாண்டில் கனமழை மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் 993 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
    புதுடெல்லி :

    கேரளா, உத்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம் உள்பட பல மாநிலங்களில் இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 993 ஆக அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலான்மை பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

    நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 17 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    சமீபத்தில் மிகப்பெரிய பேரழிவை சந்தித்துள்ள கேரளாவில் 387 பேர் உயிரிழந்துள்ளனர், அதற்கு அடுத்தபடியாக உத்திரப்பிரதேசத்தில் 204 பேர், மேற்கு வங்காளத்தில் 195 பேர், கர்நாடகா மற்றும் அசாம் மாநிலங்களில் முறையே 161 பேர் மற்றும் 46 பேர் வெள்ளம் தொடர்பான பேரிடரில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

    மேலும், மாநிலங்கள் ஒவ்வொரு இயற்கைப் பேரழிவுக்கும் பின்னர் நிவாரண நிதியை செலவிடுவதற்கு பதிலாக ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்களில் பேரிடர்கால ஆபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு என தனியாக நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.



    கடந்த ஆண்டில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200, அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 514 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×